விழாவை முன்னிட்டு, நேற்று காலை 6:30 மணியளவில் விக்னேஸ்வர பூஜை, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், அசனாம்பிக்கை உடனுறை வைத்தியநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. காலை 10:00 மணியளவில் கோவில் வளாக கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு பங்குனி விழா துவங்கியது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வரும், மார்ச் 29ம் தேதி திருக்கல்யாண உற்சவம், முக்கிய நிகழ்வான மார்ச் 31ம் தேதி தேர் திருவிழா நடக்கிறது. ஏப்ரல் 1ம் தேதி தீர்த்தவாரி உற்சவத்துடன் பங்குனி தேர் திருவிழா உற்சவம் நிறைவடைகிறது. இதேபோல், கூ.குடிகாடு கிராமத்தில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, பெண்ணாடம், கிழக்கு மெயின்ரோடு சேனைத்தலைவர் சிவசுப்ரமணியர் ஆகிய கோவில்களில் பங்குனி காவடி பெருவிழாவை முன்னிட்டு, கொடியேற்றம் நடந்தது.