76வது வர்தந்தி மகோத்ஸவம்; சிருங்கேரியில் சாரதாம்பா தேவிக்கு மஹாசன்னிதானம் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24மார் 2026 02:03
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடம் ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ பாரதி தீர்த்த மகா ஸ்வாமிகள் 76ம் ஆண்டு வர்தந்தி மகோத்ஸவ விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
விழாவில் இன்று காலை காலை 7.00 மணி அஹ்னிகா தரிசனம், காலை 8.30 மணிக்கு ஜகத்குரு மஹாஸ்வாமிஜியின் அனுக்ரஹ பாஷணம் நடைபெற்றது. தொடர்ந்து மதியம் 12.00 மணிக்கு ஸ்ரீ சாரதாம்பா தேவிக்கு ஜகத்குரு ஸ்ரீ மஹாசன்னிதானம் சிறப்பு பூஜை செயது வழிபட்டார். தொடர்ந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். மாலை 6.00 மணி. ஜகத்குரு ஸ்ரீ மஹாசன்னிதானத்திற்கு சாமூஹிக வந்தனம், , சிறப்பு சந்திரமௌலீஷ்வர பூஜை நடைபெற உள்ளது. மகாசன்னிதானத்தின் 76வது வர்தந்தி விழாவை முன்னிட்டு இன்று குரு நிவாஸ் மண்டபத்தில், நரசிம்ம வனத்தில் குருவந்தனா நிகழ்ச்சி நடைபெற உள்ளது.