Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோயில்களில் கொள்ளை கண்டுகொள்ளாத ... பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றம் பரமக்குடி முத்தாலம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பங்குனி உத்திர விழா; பூத வாகனத்தில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் வீதி உலா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பங்குனி உத்திர விழா; பூத வாகனத்தில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் வீதி உலா

பதிவு செய்த நாள்

24 மார்
2026
04:03

காஞ்சிபுரம்: பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவின் மூன்றாம் நாளான இன்று காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் பூத வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார்.


காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் இரு ஆண்டுகளுக்கு பின், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது.  காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா 14 நாட்கள் நடந்து வருகிறது. கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி பாலாலயம் செய்யப்பட்டு, 29 கோடி ரூபாய் செலவில் திருப்பணி நடந்து வந்ததால், இரு ஆண்டுகளாக பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா நடைபெறவில்லை. இந்நிலையில், கடந்த ஆண்டு டிச., 8ம் தேதி கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்து முடிந்ததை தொடர்ந்து, நடப்பு ஆண்டிற்கான பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா கடந்த 22ம் தேதி அதிகாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் தினமும் காலை, மாலையில் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகளிலும் உலா வருகிறார். விழாவின் மூன்றாம் நாளான இன்று ஏகாம்பரநாதர் பூத வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஆறாம் நாள் உத்சவமான வரும் 27ம் தேதி காலை 63 நாயன்மார்கள் உத்சவமும், ஏழாம் நாள் உத்சவமான வரும் 28ம் தேதி காலை தேரோட்டமும் நடக்கிறது.இதில், 10ம் நாளான மார்ச் 31ம் தேதி இரவு, பங்குனி உத்திர திருக்கல்யாண உத்சவம் விமரிசையாக நடக்கிறது.ஏப்., 4ம் தேதி இரவு, பொன் விமானத்தில் திருமுறை உத்சவத்துடன் பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா நிறைவு பெறுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar