புதுச்சேரி: புதுச்சேரி வில்லியனுர் சுந்தரமூர்த்தி வினாயகபுரத்தில் உள்ள "சுந்தரமூர்த்தி விநாயகர் கோவிலில் தர்மசாஸ்தா அய்யப்ப சுவாமிக்கு மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. விழாவையொட்டி நேற்று முன் தினம் (13ம் தேதி) மாலை 6 மணியவில் தர்மசாஸ்தா அய்யப்பன் சுவாமிகளின் கரிக்கோளம் வீதியுலா நடந்தது. தொடர்ந்து வாஸ்துசாந்தி, மிசுங்கரணம், அங்குரார்ப்பணம், கும்பஅலங்காரம் செய்து முதல் காலயாக பூஜை நடந்தது. நேற்று அதிகாலை 3 மணிக்கு இரண்டாம்கால பூஜையும், ஹோமங்கள், நாடி சந்தானம் நடந்தது. தொடர்ந்து திருமஞ்சன நீர் புறப்பாடு நடந்தது. காலை 5.30 மணிக்கு மகா கும்பாபிஷேகமும் நடந்தது. உபயதாரர் ஜெயக்குமார் முன்னிலையில் கோவில் குருக்கள் சிவா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். நமச்சிவாயம் எம்.எல்.ஏ., தர்மசாஸ்தா அய்யப்ப குழுவினர் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று மாலை 5 மணிக்கு சுவாமிகளுக்கு மகா அபிஷேகம், பின், சங்கராந்தி மகரஜோதி தரிசனம் நடந்தது.