திருவாரூர்: திருவாரூர் அருகே எட்டுக்குடி சுப்ரமணியஸ்வாமி திருக்கோவிலில் நாளை மற்றும் நாளை மறுநாள் இரு நாட்களுக்க சஷ்ட்டி விழா நடக்கிறது. திருவாரூர் மாவட்டம், எட்டுக்குடி சுப்ரமணிய ”வாமி திருக்கோவிலில் ஆண்டுதோறும் சஷ்ட்டி விழா கோலாகலமாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டின் நாளை 16 மற்றும் 17ம் தேதிகளில் சிறப்பாக நடக்கிறது. நாளை மாலை 5 மணிக்கு வினாயகருக்கு சிறப்பு பூஜையும், சவுந்தி ரேஸ்வரர், அனந்தவள்ளியம்மன், மகாலட்சுமி, இடும்பன் சுவாமிகளுக்கு பூஜைகளும் நடக்கிறது.17ம் தேதி காலை 8 மணிக்கு லட்சுமி கணபதி ஹோமமும், பகல் 12 மணிக்கு சரவண பொய்கையில் இருந்து பால் குட புறப்பாடும் பின்னர் முருகனுக்கு பாலாபிஷேகம், ருத்ர அபிஷேகம் மற்றும் சண்முக அர்ச்சனையும் நடக்கிறது.இரவு ஏழு மணிக்கு சஷ்டி வேலர் புறப்பாடு மற்றும் ஆஞ்சநேயர் பூஜையும் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை அறக்கட்டளை சார்பில் வல்லபநாதன் உள்ளிட்ட விழா குழுவினர்கள் செய்து வருகின்றனர்.