Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் ... வடபழநி ஆண்டவர் கோவில் பங்குனி உத்திரம் லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா 29ம் தேதி துவக்கம் வடபழநி ஆண்டவர் கோவில் பங்குனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தயாபுரம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா; பால்குடம் எடுத்து வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தயாபுரம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா; பால்குடம் எடுத்து வழிபாடு

பதிவு செய்த நாள்

25 மார்
2026
10:03

மானாமதுரை; மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள்,தீச்சட்டிகள், பால்குடங்கள் எடுத்து வழிபாடு செய்தனர்.


மானாமதுரை தயாபுரத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா கடந்த 16ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. இதனைத் தொடர்ந்து விரதமிருந்து வந்த பக்தர்கள் தினம் தோறும் இரவு கோயில் முன்பாக கும்மி பாட்டு பாடி அம்மனை வழிபட்டு வந்தனர்.நேற்று பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு பூஜாரி சுப்பிரமணியன் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் வைகை ஆற்றுக்குச் சென்று அங்கிருந்து பால்குங்கள்,தீச்சட்டிகள்,சுவாமி உருவங்கள் ஆகியவற்றை தலைசுமையாக எடுத்துக்கொண்டு நகரின் முக்கிய வீதிகளின் வழியே ஊர்வலமாக வந்து கோயிலுக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் இறங்கினர். பின்னர் கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.முன்னதாக அம்மனுக்கு 18 வகையான மூலிகைப் பொருட்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டு அபிஷேக, ஆராதனைகள்,பூஜைகள் நடைபெற்றது. கோயில் முன்பாக அன்னதானம்,கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.விழாவிற்கான ஏற்பாடுகளை டிரஸ்டிகள் சுப்பிரமணியன், நாகராஜன்,முருகன் மற்றும் பக்தர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: மஹாளய பட்ச காலத்தில், துறவறம் பூண்ட சந்நியாசிகள், ரிஷிகள் மற்றும் குருமார்களின் ஆன்மா ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar