Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி முருகன் கோயில் கற்சிலை ...  திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் ஒரே நாளில் 20 திருமணங்கள்  திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
எல்லை மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் பக்தர்கள் சுவாமி தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
எல்லை மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் பக்தர்கள் சுவாமி தரிசனம்

பதிவு செய்த நாள்

25 மார்
2026
05:03

கோத்தகிரி; கோத்தகிரி கட்டபெட்டு ஸ்ரீ எல்லை மாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடந்தது.


ஸ்ரீ எல்லை மாரியம்மன் மற்றும் ஸ்ரீ விநாயகர் ஆலயத்தில் வர்ணம் பூசி, திருப்பணிகள் நிறைவு பெற்ற நிலையில், கடந்த, 12ம் தேதி யாகசாலை முகூர்த்தக்கால் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, 23ம் தேதி காலை 7:00 மணிக்கு, தீர்த்தக்குடம் எடுத்து வரும் நிகழ்ச்சி இடம் பெற்றது.  நேற்று காலை, 7:00 மணிக்கு, விநாயகர் வழிபாடு, எஜமானர் சங்கல்பம், புண்ணியாகம், பஞ்சகவ்யம், கணபதி ஹோமம், தீபாராதன நடந்தது. காலை, 10:30 மணிக்கு, வாஸ்து சாந்தி, 5: 00 மணிக்கு, மங்கள வாத்தியம், காப்பு கட்டுதல், கும்ப அலங்காரம், கலாகர்ஷணம் பூஜையை தொடர்ந்து, அருள் சக்திகளை யாக சாலைக்கு அழைத்து வரும் நிகழ்ச்சியுடன், 108 மூலிகை யாகம், வேதப் பாராயணம் நிகழ்ச்சி இடம்பெற்றது. முக்கிய திருவிழா நாளான இன்று காலை, 6:00 மணி முதல், விநாயகர் வழிபாடு, ஸ்பர்சாகுதி, நாடி சந்தானம், மகாபூர்ணா குதி, திரு கலசங்கள் ஆலயம் வளம் வரும் நிகழ்ச்சி அடுத்து, ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ எல்லை மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை, பவானி நல்லி ஆப்பக்கூடல் சுந்தர்ராஜ் குருக்கள் மற்றும் ராஜா சிவம் குருக்கள் நடத்தி வைத்தனர். தொடர்ந்து, மகா அபிஷேக தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை, விழா குழுவினர் மற்றும் கட்டபெட்டு எல்லைக்கம்பை பொதுமக்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
விஷசஸ்திரஹத பிதுர் மகாளயம் என்பது துர்மரணம் அடைந்தவருக்கு தர்ப்பணம் செய்ய சிறந்த நாளாகும். இயற்கை ... மேலும்
 
temple news
புதுச்சேரி: உழவர்கரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி பாசுபதாஸ்திர ஜெப ஹோமம் ... மேலும்
 
temple news
உங்கள் ராசி என்ன? மேஷம் முதல் மீனம் வரை தொழில், குடும்பம், பொருளாதாரம், உடல்நலம் எப்படி இருக்கும். இந்த ... மேலும்
 
temple news
கோவை:  புரட்டாசி மாதம் பிரதோஷ தினத்தை முன்னிட்டு கோவை மதுக்கரை மலை மேல் அமர்ந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar