சென்னை சவுகார்பேட்டையில் ராமநவமி விழா; பெண்கள் கலச யாத்திரை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27மார் 2026 03:03
சென்னை : ராமநவமி முன்னிட்டு சென்னை, தங்கசாலை, சுவுகார்பேட்டையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலச யாத்திரை வீதி உலா நடந்தது.
சென்னையில் வேப்பேரி, சவுகார்பேட்டை, எம்.கே.பி.நகர், புரசைவாக்கம், அயனாவரம், தி.நகர் மற்றும் மேற்கு மாம்பலம் உள்ளிட்ட இடங்களில் வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் கணிசமாக வாழ்ந்து வருகின்றனர். சென்னையில், விநாயகர் சதுர்த்தியைப் போல, நவராத்திரி போல் ராமநவமி விழாவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இன்று ராமநவமி முன்னிட்டு சுவுகார்பேட்டையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கலச யாத்திரை வீதி உலா சென்று ராமரை வழிபட்டனர்.