உடுமலை மாரியம்மன் தேர்த்திருவிழா; அம்மனுக்கு பூச்சொரிதல் நிகழ்ச்சி
பதிவு செய்த நாள்
28
மார் 2026 08:03
உடுமலை: உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, கடந்த, 24ம் தேதி, நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. திருவிழாவில், நேற்று மாலை, 4:00 மணிக்கு, அம்மனுக்கு பூச்சொரிதல் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள், பிரசன்ன விநாயகர் கோவிலிலிருந்து, மல்லிகை, முல்லை, ரோஜா, செவ்வந்தி, அரளி, பிச்சி, சம்மங்கி, பன்னீர் புஷ்பம், பட்டு ரோஸ் உள்ளிட்ட பல்வேறு வண்ணம், ரக பூக்களை கூடைகளில் ஊர்வலமாக எடுத்து வந்தனர். தொடர்ந்து, மூலவரான அம்மனுக்கு பூக்களால் அபிேஷகம் செய்யப்பட்டது. திருவிழாவில், வரும், 31ம் தேதி, மாலை, 7:00 மணிக்கு, கம்பம் போடுதல் நிகழ்ச்சியும், ஏப்., 2ம் தேதி, இரவு, 12:00 மணிக்கு, கிராம சாந்தி, வாஸ்து சாந்தி நிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஏப்., 3ம் தேதி, மதியம், 1:00 மணிக்கு, கொடியேற்றம், மதியம், 2:00 மணிக்கு, பூவோடு துவக்கமும், 7ம் தேதி, இரவு, 10:00 மணிக்கு, பூவோடு நிறைவு நிகழ்ச்சி நடக்கிறது. ஏப்., 8ம் தேதி, அதிகாலை, 4:00 மணிக்கு மாவிளக்கு ஊர்வலமும், மாலை, 3:00 மணிக்கு, அம்மன் திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம், ஏப்., 9ம் தேதி நடக்கிறது. அன்று காலை, 6:45 மணிக்கு அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், மாலை, 4:00 மணிக்கு திருத்தேரோட்டமும் நடக்கிறது. 10ம் தேதி, காலை, 8:00 மணிக்கு, ஊஞ்சல் உற்சவம், இரவு, 8:00 மணிக்கு, பரிவேட்டை, இரவு, 10:00 மணிக்கு வாண வேடிக்கை நிகழ்ச்சியும் நடக்கிறது. 11ம் தேதி. காலை, 8:15 மணிக்கு கொடியிறக்கம், 11;00 மணிக்கு, மகா அபிேஷகம், மதியம், 12:00 மணிக்கு, மஞ்சள் நீராட்டு, மாலை, 7:00 மணிக்கு பூப்பல்லக்கு நிகழ்ச்சியும் நடக்கிறது. திருவிழாவை முன்னிட்டு, ஏப்., 3ம் தேதி முதல், தினமும் மாலை, 7:30 மணிக்கு, அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து அருள்பாலிக்கிறார். மேலும், கோவில் வளாகம் மற்றும் குட்டைத்திடலில், கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
|