Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ... மூன்று கருடசேவை உத்சவம்: பூந்தமல்லி வரதராஜப் பெருமாள் கோவிலில் கோலாகலம் மூன்று கருடசேவை உத்சவம்: பூந்தமல்லி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பாலைவனம் பாலீஸ்வரர் கோவில் தேர் கவிழ்ந்து விபத்து
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பாலைவனம் பாலீஸ்வரர் கோவில் தேர் கவிழ்ந்து விபத்து

பதிவு செய்த நாள்

30 மார்
2026
10:03

பொன்னேரி: திருப்பாலைவனம் பாலீஸ்வரர் கோவில் தேர் திருவிழாவின்போது, அச்சுமுறிந்து தேர் கவிழ்ந்ததில் அர்ச்சகர் காயமடைந்தார்.


பொன்னேரி அடுத்த திருப்பாலைவனத்தில் லோகாம்பிகாதேவி சமேத பாலீஸ்வரர் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவ விழா, கடந்த 23ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏழாம் நாளான நேற்று தேர் திருவிழாவிற்கான தயாரிப்புகள் நடந்தன. 30 அடி உயர தேரில், உற்சவ பெருமான் வீற்றிருந்தார். காலை 9:30 மணிக்கு பக்தர்கள் உற்சாகமாக வடம்பிடிக்க, மாடவீதிகள் வழியாக தேர் வலம் வந்தது. பகல் 12:00 மணிக்கு கோவில் அருகே நிறுத்தப்பட்டது. மீண்டும், 3:00 மணிக்கு தேர் புறப்பட்டு, பொன்னேரி – பழவேற்காடு மாநில நெடுஞ்சாலைக்கு அருகில் செல்லும்போது, அங்கிருந்த பள்ளத்தில் தேரின் முன் சக்கரங்கள் சிக்கின. அந்நேரம், பின்பக்க சக்கரங்களின் அச்சுமுறிந்து இரண்டும் தனியாக கழன்று ஓடின. இதனால், தேர் ஒருபக்கமாக சாய்ந்து, பழவேற்காடு மாநில நெடுஞ்சாலையின் குறுக்கே விழுந்தது. பக்தர்கள் மற்றும் தேரோட்டிகள், சுதாரித்து நகர்ந்ததால் அசம்பாவிதங்களில் இருந்து தப்பினர். அதேவேளையில், தேரின் மேல்பகுதியில் இருந்த அர்ச்சகர் அரவிந்தன், 40, இடிபாடுகளுக்கு இடையே சிக்கினார். அங்கிருந்தோர் அவரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு கையில் எலும்பு முறிவு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால், பொன்னேரி – பழவேற்காடு சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
புரட்டாசி மகாளய பட்சத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி எனப்படுகிறது. நம் முன்னோர்களின் ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 
temple news
சென்னை பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சேவையை அக்டோபர் 11ம் தேதி துவங்கி வைக்க சென்னை வருகிறார் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar