Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மயிலை கபாலீஸ்வரர் கோவில் பங்குனி ... மேல்சித்தாமூர் பர்சுவநாதர் கோவிலில் தேர் திருவிழா பக்தர்கள் வடம் பிடித்தனர் மேல்சித்தாமூர் பர்சுவநாதர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா துவக்கம்

பதிவு செய்த நாள்

30 மார்
2026
12:03

இளையான்குடி; தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய விழாவான பொங்கல் விழா வருகிற ஏப்ரல் ஐந்தாம் தேதி நடைபெற உள்ளது.


சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள தாயமங்கலம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் திருக்கோயில் உள்ளது.இங்கு வருடம் தோறும் தொடர்ந்து 10 நாட்கள் பங்குனி பொங்கல் விழா நடைபெறுவது வழக்கமாக உள்ளது. விழா நாட்களின் போது தமிழகம் முழுவதிலும் இருந்து வருகை தரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீச்சட்டி,ஆயிரங்கண் பானை, கரும்பாலை தொட்டில், முடி காணிக்கை, அங்க பிரதட்சணம் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தி ஆடு,கோழிகளை பலியிட்டு பொங்கல் வைத்து அம்மனை வேண்டி வருகின்றனர்.இந்த வருடத்திற்கான விழாவை முன்னிட்டு நேற்று இரவு 9:30 மணிக்கு கொடிமரத்திற்கு முன்பாக ஹோமங்கள் வளர்க்கப்பட்டு பூஜைகள் நடைபெற்ற பின்னர் 10:30 மணிக்கு கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்ற பிறகு மஞ்சள் கயிறை கொண்டு காப்பு கட்டப்பட்டு, தீபாராதனை நடந்தது. அப்போது குழுமியிருந்த ஏராளமான பக்தர்கள் அருள் வந்து சாமி ஆடினர். ஏராளமான பக்தர்கள் தங்களது கைகளிலும் மஞ்சள் கயிறால் காப்பு கட்டி கொண்டனர். இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள், பூஜைகள் நடைபெற்றது. விழாவில் தாயமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். 


கொடியேற்றம் நடந்ததை தொடர்ந்து இன்று முதல் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தர உள்ளதால் மதுரை, மானாமதுரை, இளையான்குடி, பரமக்குடி, காரைக்குடி,அருப்புக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா வருகிற ஏப்.5ம் தேதியும், மின் அலங்கார தேரோட்டம் 6ம் தேதியும் நடைபெற உள்ளது.8ம் தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன் மற்றும் கோயில் பணியாளர்கள், தாயமங்கலம் கிராமத்தினர், பக்தர்கள் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:  மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய ... மேலும்
 
temple news
மகாளய பட்சத்தில் வரும் பரணி நட்சத்திரத்தை மகா பரணி ஆகும். பரணி என்பது எமதர்ம ராஜனுக்குரிய நட்சத்திரம் ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar