மாமல்லபுரத்தில், மேற்குராஜ வீதி பகுதியில், ஹிந்து சமய அறநிலையத்துறையின் மல்லிகேஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில் சோமவார பிரதோஷ நாளான நேற்று மாலை 6:20 மணிக்கு நடிகர் அஜித் சிலருடன் வந்தார். கோவில் அர்ச்சகர் சந்தோஷிடம், குடும்பத்தினரின் ராசி விபரங்களை தெரிவித்து, சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டார். அவருடன் வந்த நபர், 11முக ருத்ராட்ச மாலையை, சுவாமியிடம் சமர்பித்து பின் அணிந்தார். இத்தாலியில் நடக்க உள்ள கார் பந்தயத்தில், அஜித் வெற்றிபெற வேண்டி வழிபட்டதாக கூறப்படுகிறது.