பதிவு செய்த நாள்
15
ஜன
2013
12:01
மலைகளிலும், கடற்கரை, அருவிக்கரை ஓரங்களிலும் கோயில்கள் அமைக்கப்பட்டதற்கான காரணம் தெரியுமா! நம் முன்னோர் ஆன்மிகத்தில் மட்டுமல்ல! அறிவியலிலும் கைதேர்ந்தவர்களாக இருந்தனர். ஒரு மலையைக் காட்டி, இதன் மேல் ஏறு! நன்றாக மூச்சு வாங்கும், மூச்சு வாங்குவது என்பது மிகச்சிறந்த பிராணாயாமப் பயிற்சி, என்று யாரிடமாவது சொன்னால் கேட்பார்களா! வேறு வேலை இல்லையா! போங்க சாமி! என்று ஒருமாதிரியாகப் பார்த்து விட்டு போய் விடுவார்கள். அதேநேரம், அந்த மலையில் தங்கப்புதையல் இருக்கிறதாம்! அங்கே அதிŒய நிரூற்று இருக்கிறதாம். அதில் நீராடினால், கருப்பாய் இருப்பவர் கூட சிவப்பாகி விடுவாராம், என்றால் என்னாகும்! அடித்துப் பிடித்து ஏறி மலை உச்சியை அடைந்து விடுவார். இதுதான் மனிதனின் மனநிலை. அதனால் தான் மலையிலும், கடற்கரையிலும் கோயில்களை அமைத்து வழிபாட்டு தலமாக்கினர் முன்னோர். மலையில் ஏறும்போதும், கடற்கரையில் சுத்தமான காற்று வாங்கும்போதும், நமது ரத்தத்தில் ஆக்சிஜன் கலக்கிறது. இது ஹீமோ குளோபின் என்னும் ரத்த அணுக்களை விருத்தியாக்குகிறது. தரையில் இருக்கும் கோயில்களில் உள்ள கருவறைகளை விட, மலைக்கோயில், கடற்கரை கோயில் கருவறைகளில் இருந்தும் நமக்கு சுத்தமான காற்று கிடைக்கிறது. இதனால் தான் திருப்பதி, பழநி, திருச்செந்தூர், குற்றாலத்தில் மக்கள் கூட்டம் மொய்க்கிறது. இந்தக் கோயில்களுக்குச் சென்றால் செல்வவளம் கிடைப்பதாக மக்கள் நம்புகின்றனர். இது எப்படி என்றால், இங்கே அடிக்கடி சென்றால் நோய்களின் தாக்கம் குறையும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். நோய் இல்லாதவர்களுக்கு மருத்துவச்செலவு மிச்சம். விடுமுறை எடுக்க வேண்டி வராததால், பணி, தொழிலில் கிடைக்கும் சம்பளம் குறையாது. உடல்நிலை நன்றாக இருந்தால், மனம் முன்னேற்றம் குறித்து சிந்திக்கும். இது பணக்காரர்களின் வரிசையில் இடம் பிடிக்க மனிதனுக்கு துணை செய்யும். இப்போது புரிகிறதா! மலைக்கோயில், கடற்கரை கோயில் ரகசியம். கொசுறு செய்தி: மலைக் கோயில்களுக்கு போனால், வீட்டில் தயாரித்த பசுநெய்யில் விளக்கேற்றுங்கள். செல்வவளம் இரட்டிப்பாகும் என்பது ஐதீகம்.