Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அம்பாளின் திருவடி தூசு போதும்! ÷க்ஷத்திராடனம் சென்று வந்தவர்களை ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அறிவுள்ள எதிரியை நம்பலாம்.. அறிவில்லாத நண்பனை நம்பாதே!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜன
2013
12:01

*ஒழுக்கம் இன்றி நூறு ஆண்டுகள் வாழ்வதைக்  காட்டிலும்ஒழுக்கத்துடன் ஒரு நாள் வாழ்வது சிறப்பானது.
*மனதில் எழுகின்ற ஆசைத்தீயை அடக்கி வென்றவனைத் துன்பம் ஒருபோதும் தீண்டுவதில்லை. அதனால், தாமரை இலைத் தண்ணீர் போல உலக ஆசைகளில் பற்றின்றி வாழுங்கள்.
*எண்ணம், சொல், செயல் மூன்றாலும் அடக்கம் கொண்டவர்களே உண்மையில் அடக்கமானவர்கள்.
*வயதில் மூத்தவர்களை மதித்து நடப்பவன் ஆயுள், அழகு, இன்பம், வலிமை ஆகிய நான்குவிதமான நன்மைகளைப் பெறுவான்.
*உண்மை பேசுபவர், மற்றவர் மனதைப் புண்படுத்தாதவர், மனதில் களங்கமற்றவர், பாவம் செய்ய அஞ்சுபவர் இவர்களே சமூகத்தில் உயர்வகுப்பைச் சேர்ந்தவர்கள்.
*வலிமை குன்றிய உயிர்களைத் துன்புறுத்தாமலும், பிற உயிர்களைக் கொல்லாமலும், தன்னைப் போல எல்லா உயிர்களையும் நேசித்தும் வாழ்பவனே நல்லவன்.
*நம்மை விட அறிவில் சிறந்தவர்களோடு நட்பு கொள்ளுங்கள். முடியாவிட்டால் தனிமையை நாடுங்கள். மூடர்களோடு நட்பு கொள்ளாதீர்கள்.
*நம்மைச் சுற்றி வாழும் சமூகத்திற்கு பயனுள்ள பணிகளில் ஈடுபடுங்கள். வீண் வாக்குவாதங்களிலும், பொழுதுபோக்குகளிலும் ஈடுபட்டு காலத்தை கழிக்காதீர்கள்.
*அதிகமாகப் பேசுவதால் மட்டுமே ஒருவன் அறிஞனாகி விட முடியாது. ஆசையே துன்பத்திற்கு காரணம் என்பதை உணர்த்துபவனே அறிஞன்.
*இளமையும், உடல் வலிமையும் இருந்தும் சோம்பித் திரிந்து மந்தபுத்தியோடு செயல்படுபவன் மெய்யறிவைப் பெற முடியாது.
*அறிவுள்ள எதிரியைக் கூட நம்பி விடலாம். ஆனால், அறிவில்லாத நண்பர்களை நம்பினால் ஆபத்தே உண்டாகும்.
*பகைமையை பகைமையால் வெல்ல முடியாது. அன்பின் மூலம் தான் பகையை வெல்ல முடியும்.
*உணவினை அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்து உண்ணுங்கள். கருணையோடு பிறருக்கு அளிக்கும் தானதர்மம், நம்மைக் கடவுளர் உலகில் கொண்டு சேர்க்கும்.
*பொற்காசுகள் மழையாகப் பொழிந்தாலும் மனிதனின் ஆசை அடங்குவதில்லை. ஆசையின் விளைவு துன்பம் தான் என்பதை அறிந்தவனே ஞானி.
*நம் கண் முன்னே மனிதர்கள் இறப்பதைக் கண்ட பிறகும் கூட, நாம் மட்டும் இந்த உலகில் நிலையாக இருப்போம் என்று நினைப்பது மிகவும் விந்தையானது.
*பிறரிடம் நூறு குறைகளைக் காண்பவர்கள், முதலில் தம்மிடம் இருக்கும் ஒரு குறையையாவது போக்க முயற்சிப்பது நல்லது.
*பிறப்பால், இனத்தால் யாரும் உயர்வு தாழ்வு கொண்ட வரல்ல. அனைவர் உடம்பிலும் ஒரே ரத்தமே ஓடுகிறது. அனைவருக்கும் சரி சமமான நீதியேவழங்கப்படவேண்டும். உலகமக்கள் அனைவரும் ஒரு தாயின் பிள்ளைகள் தான்.
*பூமியைப் போல பொறுமையையும், மலையைப் போல மனஉறுதியும், தெளிந்த நீரோடை போல மனத்தூய்மையும் கொண்டு வாழ்ந்தால் பிறவித்தளையில் இருந்து விடுபடலாம்.
*செல்வச் செருக்கு ஒருமனிதனை முட்டாளாக்கி விடும். செல்வத்தால் தன்னைத் தானே பெருமைப்படுத்திக் கொள்ள விரும்பாதீர்கள்.
-புத்தர்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
புதன் தலமான திருவெண்காடு பதிகத்தை தினமும் படியுங்கள்; ஓதுவார் பண்ணுடன் பாடுவதைக் ... மேலும்
 
தேரோட்டத்தில் முருகப்பெருமான் ஏறி அருள்புரிவதை தரிசிக்க ஏற்றம் ... மேலும்
 
கட்டாயமில்லை. அமாவாசையன்று சாத்தினால் ... மேலும்
 
கட்டாயம். எங்கு வசித்தாலும் வாசல் ... மேலும்
 
நல்லது. பிரச்னையில் இருந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar