Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகாவீர் ஜெயந்தி ஊர்வலம் திரளாக ... குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோவிலில் பங்குனி தேரோட்டம் குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முதலை உண்ட வாய்ப்பிள்ளை மீட்ட விழா. ஸ்ரீ சுந்தரர் கட்டமுது நிகழ்ச்சி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
முதலை உண்ட வாய்ப்பிள்ளை மீட்ட விழா. ஸ்ரீ சுந்தரர் கட்டமுது நிகழ்ச்சி

பதிவு செய்த நாள்

31 மார்
2026
05:03

அவிநாசி: ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர முதலைவாய் பிள்ளை மீட்ட ஐதீகப் பெருவிழா நடைபெற்றது. 


அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர முதலை வாய் பிள்ளை மீட்ட ஐதீக பெருவிழா நடைபெற்றது. அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலின் தல வரலாறான,அந்தனர் தெருவில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் வந்த போது எதிர் எதிர் வீட்டில் ஒரு வீட்டில் மங்கல இசையும் மற்றொரு வீட்டில் அழுகை ஒளியும் வந்தது. சுந்தரமூர்த்தி சுவாமிகள் இது குறித்து கேட்க எதிரெதிர் வீட்டு பாலகர்கள் ஒரே வயதுடையவர் என்றும் மூன்று ஆண்டுக்கு முன் தாமரை குளக்கரையில் விளையாடும்போது முதலை வந்து ஒரு சிறுவனை விழுங்கி சென்றது என கூறுகிறார்கள். முதலை உண்ட பாலகனின் பெயர் அவிநாசிலிங்கம், அவரின் பெற்றோர்கள் பெயர் வேதப்பதுமை மற்றும் கங்காதர ஸர்மா என்றும் கூறுகிறார்கள். இதைக் கேட்டு சிறுவனை இழந்த வீட்டிற்கு சென்ற சுந்தரமூர்த்தி சுவாமிகள் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறி குளக்கரையை அடைந்தார். அங்கு குளம் வற்றி இருந்தது. முதலையும் இல்லை. சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஏற்றான் மறக்கேன் என்ற திருப்பதிகம் பாடி மழை பொழிந்து குளம் நிறைந்தது. நான்காம் பாடலின் போது 3 ஆண்டு வளர்ச்சியுடன் 7 வயது சிறுவனாக முதலை வாயிலிருந்து அவிநாசிலிங்கம் வெளியில் வந்தார். இந்த அற்புத நிகழ்வு நடைபெற்ற நாளான முதலையுண்ட பாலகனை மீட்டெடுத்த விழா, நேற்று கோவிலில் திருக்கல்யாணம் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அவிநாசியப்பர், கருணாம்பிகையம்மன், சுந்தரமூர்த்தி நாயனார் மற்றும் முதலையுண்ட பாலகனின் பெற்றோர்கள் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்று முதலை வாயிலிருந்து பாலகன் மீண்டு வந்த அற்புத நிகழ்வு நடைபெற்றது. இதில், சிரவை ஆதீனம் கௌமார மடாலயம் குமரகுருபர சுவாமிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முதலை வாய்ப்பிள்ளை மீட்ட தல வரலாறு நிகழ்வைக் கண்டு பரவசம் அடைந்தனர் . முன்னதாக இன்று காலை சந்திரசேகரர், சுந்தரமூர்த்தி நாயனார் மற்றும் 63 நாயன்மார்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அவிநாசி பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள உமையஞ் செட்டியார் தண்ணீர் பந்தல் வளாகத்தில் ஸ்ரீ சுந்தரர் கட்டமுது விழா நடைபெற்றது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவபெருமான் நவராத்திரி விரதத்தை கடைப்பிடித்தே, திரிபுர தகனம் செய்தார் என்று புராணங்களில் செய்தி ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 
temple news
பல்லடம்: ஆறாக்குளம் கிராமத்தில், அம்மா சோறு, ஆத்தா சோறு என்று, மழை வேண்டி பெண்கள் மழைச்சோறு எடுத்து ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: கவுண்டம்பாளையம் சிவ நகர் சிவாலயத்தில், 17ம் ஆண்டு விழா மற்றும் அமாவாசையை ஒட்டி மகா சிவ 108 ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மதுரை ஐராவதநல்லூர் ஓம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar