ஆனைமலை: ஆனைமலை அருகே, ஒடையகுளம் ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா கடந்த, 31ம் தேதி துவங்கியது. விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், கணபதி ேஹாமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, முதல்கால யாக சாலை பூஜைகள், பூர்ணாஹுதி, தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள், இரவு, 7:00 மணிக்கு யந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று இரண்டாம் கால யாக பூஜைகள், பூர்ணாஹுதி மற்றும் கலசங்கள் புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து, ராமலிங்க சவுடாம்பிகை அம்மனுக்கு விமான, மூலாலய கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பின், மஹா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. அன்னதானம் வழங்கப்பட்டது. ஆர்ஷ வித்யா பீடம் ததேவானந்த சரஸ்வதி சுவாமிகள், மூலிகை சித்தர் சுவாமிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். ராகவேந்திரா மக்கள் இயக்கம் சார்பில், ஆன்மிக இசை கலை விழா மற்றும் விருது வழங்கும் விழா நடைபெற்றது.