அலங்காநல்லுார்: பொதும்பு வாசன் நகரில் வன்னாத்தி அம்மன் தாயார் சமேத ஆண்டிச்சாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. ஏப்.,2ல் முதல்கால யாக பூஜைகள் கணபதி ஹோமத்துடன் துவங்கின. இன்று காலை 2ம் கால யாக பூஜைகளை தொடர்ந்து கடம் புறப்பாடானது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டது. அம்மன், சுவாமி, பரிவார தெய்வங்களுக்கு புனிதநீர் ஊற்றி சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை இறை ஊழிய மகளிர் திருப்பணிக் குழுவினர் செய்திருந்தனர்.