முட்டகுறிச்சி பத்ரகாளி அம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஏப் 2026 05:04
இளையான்குடி: இளையான்குடி அருகே முட்டை குறிச்சி கிராமத்தில் உள்ள பத்திரகாளி அம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி ஏந்தி வேண்டுதல்களை நிறைவேற்றினர்.
இளையான்குடி அருகே முட்டகுறிச்சி கிராமத்தில் உள்ள சத்திரிய நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பத்ரகாளியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழா கடந்த 24ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியதைத்தொடர்ந்து அன்று இரவு உலக நன்மைக்காகவும், விவசாயம் செழிக்க வேண்டியும் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.கடந்த 31ம் தேதி ஏராளமான பக்தர்கள் வைகை ஆற்றில் இருந்து அலகு குத்தி தீச்சட்டிகள், பால்குடங்கள்,பூக்கரகம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். கடந்த 1ம் தேதி பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பூத்தட்டுகளை ஊர்வலமாக கொண்டு வந்து அம்மனுக்கு படைத்தனர். நேற்று பொங்கல் விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பால் குடங்கள் எடுத்து வந்து பாலாபிஷேகம் செய்து பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.அன்னதானம் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை முட்டகுறிச்சி சத்திரிய நாடார் உறவின் முறையாளர்கள் செய்திருந்தனர்.