Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலையில் குடிசை நன்கொடை கொள்கை நயினார்கோவில் திரவுபதி அம்மன் கோயில் பூக்குழி விழா நயினார்கோவில் திரவுபதி அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

03 ஏப்
2026
05:04

உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவிலில், தேர்த்திருவிழா கொடியேற்றம் கோலாகலமாக நடந்தது.


உடுமலையில் பிரசித்தி பெற்ற  மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, கடந்த, 24ம் தேதி, நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து, 31ம் தேதி, திருக்கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. தினமும், பெண்கள் மஞ்சள், வேப்பிலை நீர் ஊற்றி வழிபாடு நடத்தி வருகின்றனர். இன்று மதியம் கோவில் வளாகத்திலுள்ள கொடிமரத்திற்கு, பல்வேறு திரவியங்களில் மகா அபிஷேகமும், கொடிக்கு யாக சாலை பூஜைகளும் நடந்தன. தொடர்ந்து, மஞ்சள் வண்ணத்தில், சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய அம்மன்  திருஉருவம்,  சூரியன், சந்திரன் என வடிவமைக்கப்பட்ட திருவிழா கொடி, கொடி மரத்தில் பக்தர்களின் ‘‘ஓம் சக்தி, பராசக்தி ’’ கோஷம் முழங்க  திருவிழா கொடியேற்றம் கோலாகலமாக நடந்தது.


தொடர்ந்து, மகா தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடந்தன. கொடியேற்றத்தை தொடர்ந்து, திருக்கம்பத்தின் மீது பூவோடு வைத்து வழிபடும் நிகழ்ச்சி துவங்கியது. தொடர்ந்து, ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு பூவோடு எடுத்து வழிபட்டு வருகின்றனர். வரும், 7ம் தேதி, இரவு, 10:00 மணிக்கு, பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி  நிறைவு பெறுகிறது. ஏப்., 8ம் தேதி, அதிகாலை, 4:00 மணிக்கு மாவிளக்கு ஊர்வலமும், மாலை, 3:00 மணிக்கு, அம்மன் திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம், ஏப்., 9ம் தேதி நடக்கிறது. அன்று காலை, 6:45 மணிக்கு  அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், மாலை, 4:00 மணிக்கு திருத்தேரோட்டமும் நடக்கிறது. வரும் 10ம் தேதி, காலை, 8:00 மணிக்கு, ஊஞ்சல் உற்சவம், இரவு, 8:00 மணிக்கு, பரிவேட்டை, இரவு,  10:00 மணிக்கு வாண வேடிக்கை நிகழ்ச்சியும் நடக்கிறது. 11 ம் தேதி காலை, 8:15 மணிக்கு கொடியிறக்கம், 11;00 மணிக்கு, மகா அபிேஷகம், மதியம், 12:00 மணிக்கு, மஞ்சள் நீராட்டு, மாலை, 7:00 மணிக்கு பூப்பல்லக்கு நிகழ்ச்சியும் நடக்கிறது. திருவிழாவை முன்னிட்டு, ஏப்., 3ம் தேதி முதல், தினமும் மாலை, 7:30 மணிக்கு, அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து அருள்பாலிக்கிறார். மேலும், கோவில் வளாகம் மற்றும் குட்டைத்திடலில், கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூரில் மாத பூசம் தினமான இன்று வள்ளலார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.கடலூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar