திருவாடானை: திருவாடானையில் திரவுபதி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மகாபாரத போர் நிறைவு நிகழ்வாக திரவுபதி கூந்தல் முடிதல் நிகழ்வு நடந்தது. திருவிழா மார்ச் 25 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக மகாபாரத கதையில் கூந்தல் முடிதல் நிகழ்வு நடந்தது. திரவுபதி வேடமணிந்த பக்தர் வீதிகள் வழியாக ஆக்ரோஷமாகவும், பின்னர் சபதம் முடிந்ததும் அமைதியாவது போன்ற நிகழ்வுகள் நடந்தது. இது குறித்து பக்தர்கள் கூறுகையில், தர்மம் வெல்லும் என்பதை உணர்த்தும் இந்த விழா ஊர் மக்களின் ஒற்றுமையை மேம்படுத்தும் நோக்கில் ஆண்டு தோறும் சிறப்பாக நடைபெறுகிறது. ஏப்.,4ல் விழா நிறைவு பெறும் என்றனர்.