சோழவந்தான் பத்ரகாளியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஏப் 2026 06:04
சோழவந்தான்: சோழவந்தான் பத்ரகாளியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழா நடந்தது. மார்ச் 23 ல் அம்மன் உத்தரவு பெற்று, மார்ச் 24ல் காப்புக் கட்டுதல், செவ்வாய் சாட்டுதலுடன் விழா தொடங்கியது. மார்ச் 30 பூச்சொரிதல், ஏப்.1 ல் பால்குடம், அக்னிசட்டி, ஏப்.2ல் ரிஷப வாகனத்தில் அம்மன் வீதி உலா நடந்தது. இன்று ஏப்.3 ல் மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. கண்ணன் பட்டர், அர்ச்சகர் சண்முகம் பூஜைகள் செய்தனர். விழா குழு ஏற்பாடுகளை செய்தது.