நெட்டப்பாக்கம்: பண்டசோழநல்லூர் முத்தாலம்மன் கோவிலில் மஞ்சு விரட்டு நிகழ்ச்சி நேற்று நடந்தது.பண்டசோழநல்லூர் முத்தாலம்மன் கோவில் தீமிதி விழா, கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. போகிப்பண்டிகையொட்டி தீமிதி விழா கடந்த 14 ம்தேதி நடந்தது. மாட்டுப் பொங்கலையொட்டி நேற்று மாலை 6 மணிக்கு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடந்தது. பண்டசோழநல்லூர் மற்றும் சுற்றிலுள்ள பகுதியை சேர்ந்த 500க்கும்மேற்பட்ட மாடுகள் பங்கேற்றன. ஏற்பாடுகளை தனிஅதிகாரி தமிழ்மணி மற்றும் கிராமத்தினர் செய்திருந்தனர்.