நெட்டப்பாக்கம்: நல்லாத்தூர் வரதராஜப் பெருமாள் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.ஏம்பலம் அடுத்த நல்லாத்தூர் வரதராஜப் பெருமாள் கோவிலில், போகிப் பண்டிகையை முன்னிட்டு, ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. விழாவையொட்டி, அன்று காலை 10 மணிக்கு பெருமாள் தாயார் திருமணக் கோலத்தில் சன்னதி புறப்பாடு நடந்தது.காலை 10.30 மணிக்கு அலங்கார மண்டபத்தில் ஒய்யாளி சேவை, 11 மணிக்கு பெரியாழ்வாரின் சீதனமாக வஸ்திரங்கள், வரிசை தட்டுகள் சமர்ப்பிக்கப்பட்டு, புண்ணியாகம், வாரணமாயிரம் வாசித்தல் நடந்தது. உற்சவத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு தீர்த்தப் பிரசாதம், முகூர்த்த மாலைகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் குழு தலைவர் சம்பங்கி, ஸ்ரீதர்ராஜா செய்திருந்தனர்.