பங்குனி சோமவாரம்: புவனேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஏப் 2026 10:04
கோவை: பங்குனி மாதம் நான்காவது சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு கோவை சுந்தராபுரம் காமராஜர் நகர் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் -1ல் அமைந்துள்ள கம்பீர விநாயகர் கோவிலில் இருக்கும் ஸ்ரீ புவனேஸ்வரருக்கு அபிஷேகம் பூஜை நடந்தது இதில் சந்தன காப்பு அலங்காரத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.