Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நெல்லிக்குப்பம் அய்யனாரப்பன் ... திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தீர்த்த உற்ஸவம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கழுக்குன்றம் சொக்கப்பானை விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருக்கழுக்குன்றம் சொக்கப்பானை விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

06 ஏப்
2026
03:04

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், சொக்கப்பானை விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. திருக்கழுக்குன்றத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வேதகிரீஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது. வேதமலை அடிவார வீதி, சன்னிதி வீதி ஆகியவற்றின் சந்திப்பு பகுதியில், சொக்கப்பனை விநாயகர் கோவில் உள்ளது. கார்த்திகை தீப உத்சவத்தின்போது, இக்கோவிலின் முன், சொக்கப்பனை ஏற்றப்படுவதால், சொக்கப்பானை விநாயகர் என அழைக்கப்படுகிறார். கோவில் நீண்டகாலமாக பராமரிப்பில்லாமல் இருந்ததால், அதை புனரமைக்குமாறு, பக்தர்கள் வலியுறுத்தினர். அறநிலையத்துறை புனரமைப்பதாக, கடந்த 2023 சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, வேதகிரீஸ்வரர் கோவில் நிதி 8.15 லட்சம் ரூபாய் மதிப்பில், 2024ல் புனரமைப்பு பணிகள் துவக்கப்பட்டன. சன்னிதி, விமான கோபுரம், சுவர் உள்ளிட்டவை புனரமைக்கப்பட்டன. நேற்று யாகசாலை சடங்குகள், முதல்கால யாகசாலை பூஜை நடந்தது. இன்று காலை, இரண்டாம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்து, விமானங்களில் 10:00 மணிக்கு புனித நீரூற்றி, மஹாகும்பாபிஷேகம் நடந்தது. அறநிலையத்துறை ஆய்வாளர் பாஸ்கரன், கோவில் செயல் அலுவலர் வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசி மகாளய பட்சத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி எனப்படுகிறது. நம் முன்னோர்களின் ... மேலும்
 
temple news
சென்னை பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சேவையை அக்டோபர் 11ம் தேதி துவங்கி வைக்க சென்னை வருகிறார் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசராவை முன்னிட்டு, இளவரசர் யதுவீர் தனியார் தர்பார் நடத்துவதற்காக, அரண்மனையில் தங்க ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி அருகே அமைந்துள்ள ஒளிலாயம் சித்தர்புரத்தில் அரசு கொறடா சபரிநாதன்  வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar