ஆன்மிக ரீதியாக மட்டுமில்லாமல் அறிவியல் உலகிலும் சூரியனின் பங்கு முக்கியமானது. நடுத்தரவகை நட்சத்திரமாக விளங்கும் சூரியன் நெருப்பு பிழம்பாக வெப்பத்தை உமிழ்ந்தபடி இருக்கிறது. இதில் அணுப்பிளவு நிகழ்ந்த வண்ணமிருக்கும். பூமியிலிருந்து சூரியன் 15 கோடி கி.மீ., துாரத்தில் உள்ளது.
பூமியின் விட்டத்தை விட 109 மடங்கு பெரியது. அதன் விட்டம் 13 லட்சத்து 91 ஆயிரத்து 980 கி.மீ., காற்று வீசுவதற்கும், மழை பெய்வதற்கும் காரணம் சூரியனே. 8.5 நிமிடத்தில் சூரிய ஒளி பூமியை வந்தடைகிறது.
சூரியனைப் நிரப்ப வேண்டுமானால் 440 பூமிப்பந்துகள் தேவைப்படும். சூரியனின் ஒளி நொடிக்கு ஒரு லட்சத்து 86 ஆயிரம் மைல் வேகத்தில் பூமியை நோக்கிப் பாய்கிறது. சூரியனில்லாத பூமி இருண்டு விடும். மழையோ, நீரோ இருக்காது. உயிர்கள் எதுவும் உற்பத்தியாகவோ, வாழவோ முடியாது. உயிர்களின் வாழ்வாதாரமாக சூரியனின் இயக்கம் இருந்து வருகிறது.