Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிரான்மலை குன்றுவளர்ந்த பிடாரி ... எமனேஸ்வரம் வாழவந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்திரமேரூர் துர்க்கையம்மன் கோவிலில் மூலவர் மீது படர்ந்த ஒளிகதிர்: பக்தர்கள் பரவசம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
உத்திரமேரூர் துர்க்கையம்மன் கோவிலில் மூலவர் மீது படர்ந்த ஒளிகதிர்: பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

07 ஏப்
2026
06:04

உத்திரமேரூர்: உத்திரமேரூர் துர்க்கையம்மன் கோவிலில் நேற்று சூரிய உதயத்தின் போது ஒளி கதிர்கள் கருவறையில் உள்ள மூலவர் மீது பட்டு பிரகாசிக்கும் அரிய நிகழ்வால் பக்தர்கள் பரவசம் அடைந்து வழிபட்டனர்.


உத்திரமேரூரில் பழமை வாய்ந்த வடவாயிற் செல்வி என்கிற துர்க்கை அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 5, 6, 7 ஆகிய தேதிகளில் நவகிரகங்களின் தலைமை கிரகமான சூரிய பகவான் மூலவரை வழிபடுவது சிறப்பாக உள்ளது. அதாவது, உத்ராயணமான நாளில், சூரியன் இடம் பெயரும் போது, சூரிய ஒளிக் கதிர்கள் மூலவர் மீது விழும் வகையில் இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. அதாவது, சூரிய உதயத்தின் போது ஒளிகதிர்கள் நேரடியாக கருவறையில் உள்ள மூலவர் மீது பட்டு பிரகாசிக்கும் அதிசய நிகழ்வு நடைபெறும். அதன்படி, இன்று அதிகாலை சூரிய உதயத்தின் போது, இக்கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளிக்கதிர் விழுந்தது. காலை 6.09 மணி முதல், காலை 6.24 மணி வரை தொடர்ந்து 15 நிமிடங்கள் நடைபெற்ற இந்த அரிய நிகழ்வில் மூலவராக உள்ள துர்க்கை அம்மனின் கிரீடத்தில் சூரிய ஒலிக்கதிர்கள் முதலில் உச்சியில் பட்டு, படிப்படியாக திரு மேனி முழுதும் பரவி பிரகாசித்து. பின், இறுதியாக பாதத்தில் முடிவடைந்தது. அப்போது பக்தர்கள் ஓம் சக்தி என பக்தி பரவசமுடன் கோஷங்கள் எழுப்பி வழிபட்டனர். இந்நிகழ்ச்சியையொட்டி துர்க்கை அம்மனுக்கு நேற்று சிறப்பு அபிஷேகம், ஆராதணை நடைபெற்றது. இதுபோன்று, தமிழகத்தில் சில கோவில்களில் மட்டுமே இந்த அரிய நிகழ்வு நடைபெறுவதாகவும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் உத்திரமேரூர் துர்க்கை அம்மன் கோவிலில் மட்டுமே இதுபோன்ற சிறப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சத்திரம்: திருச்சோபுரம் திருச்சோபுரநாதர் கோவிலில், சுவாமி சிலை மீது சூரிய ஒளிபடும் அதிசய ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பாலமலை வழியாக மேல்முடி ரங்கநாதர் கோயில் செல்ல விரும்பிய, 500 ... மேலும்
 
temple news
சென்னை: சாய்பாதானந்தா திரைப்படம் குரு பக்தியின் உச்சம் என, திரைப்பட கலைஞர்கள் பாராட்டு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூதநாராயண பெருமாள் கோவிலில் மத்யாஷ்டமியை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: புரட்டாசி மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar