கோதண்டராமர் ஸ்வாமி கோயிலில் பிருமோற்சவ விழா நிறைவு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஏப் 2026 06:04
தேவகோட்டை: தேவகோட்டை கோதண்டராமர் ஸ்வாமி கோயில் பங்குனி பிரம்மோற்சவம் விழா மார்ச் 27 ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் ராமர் சீதா லட்சுமணருக்கு சிறப்பு அலங்காரம் பூஜைகள் நடந்தன. சிறப்பு வாகனங்களில் வீதி உலா அருள்பாலித்தனர். ஐந்தாம் நாள் ராமர் சீதா திருக்கல்யாணம் நடைபெற்றது 9 ம் நாள் தேரோட்டம் நடைபெற்றது நிறைவு நாளான இன்று மாலை கோதண்டராமர், சீதாதேவி, லட்சுமணர் ஆகியோர் விடயாற்றியாக பட்டாபிஷேகம் சிறப்பு அலங்காரத்தில் புஷ்பக விமானத்தில் நகரின் முக்கிய வீதிகளில் நகர் வலம் வந்தனர். வீடு தேடி வந்த பெருமாள் ராமருக்கு வழிநெடுகிலும் பக்தர்கள் சிறப்பு ஆராதனைகள் செய்து வழிபட்டனர்.