ஒவ்வொரு மனிதனுக்கும் தேவையானது ஆரோக்கியம். ஆரோக்கியம் இல்லாவிட்டால் நிம்மதியாக வாழ முடியாது. ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பது இதனால் தான். இதை ஆங்கிலத்தில் ‘ஹெல்த் ஸ் வெல்த்’ (health is wealth ) என்பர். ஆனால் ஆரோக்கியம் யாருக்கும் எளிதில் கிடைப்பதில்லை. ஒவ்வொருவரும் தங்களின் வருமானத்தில் 30 சதவீதத்தை மருந்து மாத்திரைக்காக செலவு செய்கின்றனர். இது நல்லதல்ல. இனியாவது திருந்துங்கள்.
* பசித்தால் மட்டும் உண்ணுங்கள். * தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள் * குறைந்தது 7 மணி நேரம் துாங்குங்கள். இதை பின்பற்றினால் ஆரோக்கியமாக வாழலாம்.