சமீபத்தில் பல இடங்களில் நடந்த சம்பவத்தை பார்ப்போம். * மிருகக்காட்சி சாலைக்கு வந்த ஒரு குழந்தை கூண்டுக்குள் தவறி விழுந்தது. அந்தக் குழந்தையை கையில் எடுத்த குரங்கு அக்குழந்தையை கதறிய பெற்றோரிடமே ஒப்படைத்தது. * சிங்கத்தின் கூண்டுக்குள் கையை விட்டு செல்பி எடுக்க முயற்சித்தான் ஒரு இளைஞன். அதை பார்த்த சிங்கம் கையை வெளிப்புறமாக வைத்துக் கொள் என தன்னுடைய காலால் சைகை காட்டியது. * உடம்பே மூழ்கும் அளவுக்கு யானை ஒன்று வெள்ளத்தில் நீந்தி வந்தது. ஆனாலும் அதன் முதுகில் சிறுத்தைக்குட்டி ஒன்றை சுமந்து வந்தது. வழியில் ஒரு மரத்தின் மீது இருந்த மான்குட்டியுடன் பாதுகாப்பாக சேர்த்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது. மற்ற உயிர்களை நேசியுங்கள்; பகை இல்லாமல் வாழுங்கள் என உணர்த்துகிறது இந்த விலங்குகள். இப்படி விலங்குகள் கூட மற்ற உயிர்களின் மீது அன்பு காட்டுகின்றன. ஆனால் மனிதன்...? ‘பகைவனுக்கும் கருணை காட்டு’ என்கிறது பைபிள்.