மேலூர் முத்துமாரி அம்மன் கோயிலில் அம்மனுக்கு பாலாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஏப் 2026 01:04
மேலூர்: மேலூர் முத்துமாரி அம்மன் கோயில் பங்குனி மாத திருவிழாவை முன்னிட்டு ஏப். 7 கரகம் எடுத்தல், மாவிளக்கு வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இன்று மண்கட்டி தெப்பக்குளத்தில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து கோயிலுக்கு சென்றனர். அங்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து முளைப்பாரி ஊர்வலமும், புஷ்பத்தேரில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நாளை (ஏப். 9 )கோயிலில் இருந்து முளைப்பாரி எடுத்து சூரக்குண்டு மாத்தி கண்மாயில் கரைக்கும் நிகழ்ச்சி மற்றும் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவு பெறும்.