வராக ஜெயந்தி: சிறப்பு அலங்காரத்தில் மூலவர் பூவராக சுவாமி அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஏப் 2026 12:04
பள்ளிப்பட்டு: வராக ஜெயந்தியை ஒட்டி, மேல்பொதட்டூர் பூவராக சுவாமி கோவிலில்,நடந்த யாகத்தில், சிறப்பு அலங்காரத்தில் மூலவர் பூவராக சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பள்ளிப்பட்டு ஒன்றியம், மேல்பொதட்டூரில் பழமையான ஸ்ரீதேவி சமேத பூவராக சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், வராக சுவாமி ஜெயந்தியை ஒட்டி நேற்று பூவராக சுவாமி கோவிலில் சிறப்பு யாகம் நடைபெற்றது. காலை 7:00 மணிக்கு கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. அதை தொடர்ந்து 9:00 மணிக்கு கலச ஸ்தாபனம், 11:00 மணிக்கு, மூலவருக்கு கலச ஸ்தபனம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.