Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உடுமலை மாரியம்மன் கோவிலில் ... அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோயிலில் அக்னி சட்டி எடுத்த பக்தர்கள் அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அரகண்டநல்லூர் கூத்தாண்டவர் கோவில் சித்திரை பெருவிழா: தேர்பவனி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அரகண்டநல்லூர் கூத்தாண்டவர் கோவில் சித்திரை பெருவிழா: தேர்பவனி

பதிவு செய்த நாள்

08 ஏப்
2026
05:04

திருக்கோவிலூர்: அரகண்டநல்லூர் அடுத்த அருணாபுரம் கூத்தாண்டவர் கோவில் 522ம் ஆண்டு சித்திரை பெருவிழா நடந்தது.


அரகண்டநல்லூர் அடுத்த அருணாபுரம் கிராமத்தில் பழமைவாய்ந்த கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இவ்வாலயத்தில் கடந்த 24 ம் தேதி 522ம் ஆண்டு சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று இரவு 7:00 மணிக்கு திருநங்கைகள் தாலி கட்டி, வான வேடிக்கையுடன், கரகாட்டம், மேளதாளம் முழங்க கூத்தாண்டவர் திருமண கோலத்தில் இந்திர விமானத்தில் வீதியுலா நடந்தது. இன்று காலை 9:00 மணிக்கு அரவான் யுத்த கோலத்தில் பெரும் தேர்பவனி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆடுகளை பலியிட்டு, தேரை வடம் பிடித்து முக்கிய வீதிகள் வழியாக இழுத்துச் சென்றனர். மாலை 5:30 மணிக்கு அரவான் களபலி நடைபெற்றது. இரவு 10:00 மணிக்கு இந்திர விமானத்தில் சுவாமி காட்டுகுகை கோவிலுக்கு புறப்பட்டுச் செல்லும் வைபவம் நடக்கிறது  விழாவின் நிறைவாக வரும் 14-ம் தேதி மாலை 5:00 மணிக்கு காட்டு கோவிலில் தர்மர் பட்டாபிஷேகம் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தா, நாட்டாமைகள், ஊராட்சி நிர்வாகம் மற்றும் கிராம பொதுமக்கள் இணைந்து செய்திருந்தனர். இதில் திருநங்கைகள் உள்ளிட்ட பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புட்டபர்த்தி: பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெற்ற இரண்டு நாள் அகில இந்திய ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: செங்கல்பட்டு ஓசூரம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா, இன்று  நடந்தது.செங்கல்பட்டு அருகே ... மேலும்
 
temple news
நாகப்பட்டினம்: நாகையில் பிரசித்திப் பெற்ற பழமையான, சௌந்தரநாயகி அம்பாள் உடனுறை சொர்ணபுரீஸ்வர சுவாமி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: கோனேரிராஜபுரம் அருகே சிவனாரகரம்  சுயம்பேஸ்வரர் சுவாமி கோயிலில் நடந்த சத்ரு சம்ஹார வேல் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில், கார்த்திகை மாத முதல் ‘கடை ஞாயிறு விழா’ இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar