திருப்பதி தேவஸ்தானத்திற்கு 10 லட்சம் நன்கொடை அளித்த பக்தர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஏப் 2026 04:04
திருப்பதி:பெங்களூரைச் சேர்ந்த பக்தர் ஜி. விஜய் ஹேமந்த், திருமலை திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா அன்னப்பிரசாத அறக்கட்டளைக்கு ரூ. 10,00,104 நன்கொடையாக வழங்கியுள்ளார். இது தொடர்பாக, அந்த நன்கொடைக்கான வரைவோலையை திருமலையில் அமைந்துள்ள கூடுதல் செயல் அலுவலரின் முகாம் அலுவலகத்தில் வைத்து, கூடுதல் செயல் அலுவலர் வெங்கையா சௌத்ரியிடம் நன்கொடையாளர் நேரில் ஒப்படைத்தார்.