Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உடுமலை மாரியம்மன் கோவில் தேரோட்டம் ... மருபாய் கவதேவி கோவிலில் கும்பாபிஷேகம் செய்த காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மருபாய் கவதேவி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் மலை; புதிய வழக்கு அபராதம் விதித்தது உயர்நீதிமன்றம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றம் மலை; புதிய வழக்கு அபராதம் விதித்தது உயர்நீதிமன்றம்

பதிவு செய்த நாள்

09 ஏப்
2026
05:04

  மதுரை,  திருப்பரங்குன்றம் மலையில் ரம்ஜான் பண்டிகையின் போது முஸ்லிம்களை தொழுகை நடத்த அனுமதித்தது தொடர்பாக, அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரிய வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, மனுதாரருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தது. ஹிந்து தர்ம பரிஷத் மேலாண்மை அறங்காவலர் ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு: திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணில் தீபம் ஏற்ற விடாமல் தமிழக அரசு தடுக்கிறது. இதற்காக உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் அரசு சட்டப்போராட்டம் நடத்துகிறது. தீபத்துாணில் தீபம் ஏற்ற மற்றும் அங்கு வழிபட ஹிந்துக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. ரம்ஜான் பண்டிகையின் போது மலையில் தொழுகை நடத்த முஸ்லிம்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கவில்லை. இது சட்டத்திற்கு புறம்பானது. மதுரை கலெக்டர், போலீஸ் கமிஷனர், தொல்லியல்துறை அலுவலர், சுப்பிரமணியசுவாமி கோயில் இணை கமிஷனர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய, மாநில உள்துறை செயலர்களுக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.


இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் என்.சதீஷ்குமார், எம்.ஜோதிராமன் அமர்வு:இதுபோல் எத்தனை வழக்குகள் தாக்கல் செய்வீர்கள். நீதிமன்றத்திற்கு வேறு வேலை இல்லையா. ஏற்கனவே இதுபோன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்க, மனுதாரரால் நீதிமன்றத்தில் ரூ.10 லட்சத்தை டெபாசிட் செய்ய முடியுமா. ஊடகங்களில் தனது பெயர் வெளிவரவேண்டும் என்ற நோக்கில் இதுபோன்ற மனுக்களை மனுதாரர் தொடர்ந்து தாக்கல் செய்வதாக தெரிகிறது.


இவ்வாறு அதிருப்தியை வெளியிட்டனர்.பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இது விளம்பர நோக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது . தள்ளுபடி செய்கிறோம். மனுதாரருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இவ்வாறு குறிப்பிட்டனர்.மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், ‛அபராதம் விதித்ததை நீக்கம் செய்ய வேண்டும்,’ என்றார். நீதிபதிகள், ‛வருங்காலங்களில் இதுபோன்ற வழக்கு தாக்கல் செய்ய மாட்டேன் என மனுதாரர் உத்தரவாதம் அளிக்கும் பட்சத்தில் அபராதத்தை நீக்க பரிசீலிக்கப்படும்,’ என்றனர்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கருணை ஒன்றையே வாழ்க்கை நெறியாக கொண்டு வாழ்ந்த வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் பிறந்த ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பூமிநீளா புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் ... மேலும்
 
temple news
கோவை : புரட்டாசி மாதம் மூன்றாவது சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு இன்று கோவை மதுக்கரை மலை மேல் ... மேலும்
 
temple news
கடலாடி: கடலாடி அருகே மலட்டாற்று பகுதியில் இயங்கி வரும் பிரபஞ்ச ஆற்றல் நல்வாழ்வு மைய ஆசிரமத்தில் ருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar