Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை கோவில் நடை திறப்பு: 15ம் தேதி ... நெகமம் சித்தி புத்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நெகமம் சித்தி புத்தி விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் பா.ஜ., வேட்பாளர் எல்.முருகன் வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் பா.ஜ., வேட்பாளர் எல்.முருகன் வழிபாடு

பதிவு செய்த நாள்

11 ஏப்
2026
01:04

அன்னூர்: அவிநாசியை முன்மாதிரி தொகுதியாக உருவாக்குவேன்," என, பா.ஜ., வேட்பாளர் எல்.முருகன் அன்னூரில் தெரிவித்தார்.


மேற்றலை தஞ்சாவூர் என்று அழைக்கப்படும், ஆயிரம் ஆண்டுகள், பழமையான, அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில், மத்திய இணை அமைச்சரும், அவிநாசி தொகுதி பா.ஜ., வேட்பாளருமான, எல்.முருகன் இன்று வருகை தந்தார். கோவில் நிர்வாகம் மற்றும் சிவாச்சாரியார்கள் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவிலில் விநாயகர், சூரியன், சந்திரன், பைரவர், சனீஸ்வரர், தட்சிணாமூர்த்தி, அருந்தவ செல்வி அம்மன் மற்றும் மூலவர் மன்னீஸ்வரர் சன்னதிகளில் எல்.முருகன் வழிபாடு செய்தார். சனீஸ்வரர் சன்னதியில் எள் தீபம் ஏற்றி வேண்டினால் வேண்டியது நடக்கும் என்பது ஐதீகம். முருகன் அங்கு எள் தீபத்தை ஏற்றி வழிபாடு செய்தார்.  


பின்னர் அன்னூர் நகரில் உள்ள அ.தி.மு.க., நிர்வாகிகள் வீடுகளுக்கு சென்றார். அங்கு பா.ஜ., வேட்பாளர் எல். முருகன் பேசியதாவது : அவிநாசியை, தமிழகத்தின் முன்மாதிரி தொகுதியாக உருவாக்குவேன். அன்னூர் மற்றும் அவிநாசியில் உள்ள அரசு மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்படும். அன்னூர் வட்டார விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை மேட்டுப்பாளையம், கோவை மற்றும் ஈரோடு மாவட்டத்திற்கு கொண்டு செல்லும் அவலத்தைப் போக்க, அன்னூரில் உழவர் சந்தை அமைக்கப்படும். அன்னூரில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்படும். சொந்த கட்டிடம் இல்லாத அன்னூர் தீயணைப்பு நிலையம் மற்றும் நீதிமன்றத்திற்கு சொந்த கட்டிடம் அமைத்து தரப்படும். சாலை வசதி, பஸ் வசதி இல்லாத கிராமங்களுக்கு முழுமையான சாலை வசதி மற்றும் பஸ் வசதி ஏற்படுத்தி தரப்படும். விடுபட்ட குளம், குட்டைகளுக்கு, அத்திக்கடவு அவிநாசி இரண்டாம் திட்டம் துவக்கி செயல்படுத்தப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், அ.தி.மு.க., தொகுதி பொறுப்பாளர் அம்பாள் பழனிசாமி, வடக்கு ஒன்றிய செயலாளர் சரவணன், நகரச் செயலாளர் சவுக்கத் அலி, பா.ஜ., ஒன்றிய தலைவர் ஆனந்தன் உட்பட பலர் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
விஷசஸ்திரஹத பிதுர் மகாளயம் என்பது துர்மரணம் அடைந்தவருக்கு தர்ப்பணம் செய்ய சிறந்த நாளாகும். இயற்கை ... மேலும்
 
temple news
புதுச்சேரி: உழவர்கரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி பாசுபதாஸ்திர ஜெப ஹோமம் ... மேலும்
 
temple news
உங்கள் ராசி என்ன? மேஷம் முதல் மீனம் வரை தொழில், குடும்பம், பொருளாதாரம், உடல்நலம் எப்படி இருக்கும். இந்த ... மேலும்
 
temple news
கோவை:  புரட்டாசி மாதம் பிரதோஷ தினத்தை முன்னிட்டு கோவை மதுக்கரை மலை மேல் அமர்ந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar