அத்திக்குன்னா பெரியாயி அம்மன் கோவில் திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஏப் 2026 10:04
பந்தலூர்: பந்தலூர் அருகே அத்திக்குன்னா ஸ்ரீ பெரியாயி அம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
பந்தலூர் அருகே அத்திக்குன்னா பகுதியில், அருள்மிகு ஸ்ரீ பெரியாயி, ஸ்ரீ சடையனார், ஸ்ரீ தேவி காட்டு மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இதன் வருடாந்திர திருவிழா நேற்று காலை, கணபதி ஹோமம், கொடியேற்றம் மற்றும் சிறப்பு பூஜைகளுடன் துவங்கியது. தொடர்ந்து இன்று காலை முதல் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் மற்றும் நள்ளிரவு, அம்மனுக்கு கிடா மற்றும் பன்றி பலி கொடுக்கும் பூஜைகளும் அதனைத் தொடர்ந்து, பல்வேறு சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளது.கொடியேற்றத்துடன் துவங்கிய பூஜையில், கோவில் பூஜாரி ராதாகிருஷ்ணன், கோவில் கமிட்டினர் மற்றும் பல்வேறு கிராம மக்கள் பங்கேற்றனர்.