லட்சதீப மகோற்சவம்: விழுப்புரம் ஆஞ்சநேயர் சுவாமி வீதியுலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஏப் 2026 10:04
விழுப்புரம்: விழுப்புரம் திரு.வி.க., வீதியில் உள்ள ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் லட்சதீப மகோற்சவத்தையொட்டி, சுவாமி வீதியுலா நடந்தது.
விழுப்புரம் திரு.வி.க., வீதியில் ஆஞ்சநேய சுவாமி கோவில் உள்ளது. இங்கு, 102வது ஆண்டு லட்சதீப மகோற்சவ பெருவிழா கடந்த 10ம் தேதி சுவாமி விமான வீதியுலாவோடு துவங்கியது. இன்று ஆஞ்சநேயர் சுவாமி, கிருஷ்ணர் அலங்காரத்தில் கோபிகா ஸ்திரிகளுடன் பின்னக்கிளையுடன் வீதியுலா நடந்தது. 14ம் தேதி லட்சதீப பெருவிழாவும், சுவாமி கருடசேவையில் அருள்பாலிக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. வரும் 19ம் தேதி தெப்பேற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்து வருகின்றனர்.