பதிவு செய்த நாள்
12
ஏப்
2026
10:04
அலங்காநல்லுார்:அ.புதுப்பட்டியில் ராமகிருஷ்ணன் கோயில் 75ம் ஆண்டு உற்சவ விழா 3 நாட்கள் நடந்தது. ஏப்.,10 சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், தர்ம சாஸ்தா கோயில் நிர்வாகி சீனிவாசன் முன்னிலையில் திருவிளக்கு பூஜை வழிபாடு செய்தனர்.ஏப்.,11 ராமகிருஷ்ணர்,விநாயகர் புதுப்பட்டிஸ்வரர், பாலமுருகன், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர்,துர்க்கை, கால பைரவர் மற்றும் நவகிரக தெய்வங்களுக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது. அன்று மாலையில் மாவிளக்கு, முளைப்பாரி எடுத்து ஊர்வலம் சென்றனர். இரவு சுவாமி மின்னொளி
சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. இரவு 12:00 மணிக்கு பக்தர்களுக்கு அருட் பிரசாதமும்,நேற்று காலை 9:00 மணிக்கு மஞ்சள் நீராடுதல் விழா, அன்னதானம் நடந்தது. விழா நாட்களில் இரவு கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.