பழநி பாதயாத்திரை பக்தர்களின் சுகாதாரம் பாதிக்கும் அபாயம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜன 2013 11:01
நத்தம்:நத்தம் வழியாக பழநிக்கு செல்லும் பாதயாத்திரைபக்தர்களுக்கு இடை யூறாக,ரோட்டோரகிராமங்களில் தேங்கிய குப்பைகள்,சாக்கடை கழிவுநீர் இருப்பதால், வாகனங்களுக்கு ஒதுங்கி செல்லமுடியாமல் பாதிப் படைந்துள்ளனர்.தைப்பூசத்தை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் பழநிக்கு பாதயாத்திரையாக நத்தம் வழியாக செல்கின்றனர். காரைக்குடியிலிருந்து திண்டுக்கல் செல்லும் மாநில நெடுஞ் சாலை ரோட்டில் நத்தம், சாணார்பட்டி ஒன்றியங்களைச் சேர்ந்த கிராமப் புற ஊராட்சிகள் உள்ளன. இவைகளில் அப்பகுதி மக்களால் கொட்டப் படும் குப்பைகள், ரோட்டோர குடிநீர் குழாய்கள் மற்றும் குடியிருப்புக் களின் கழிவு நீர் ஆகியவை தேங்கி காணப்படுகின்றன.இவைகளால் ரோட்டில் நடந்துச் செல்லும் பாதயாத்திரை பக்தர்கள் ரோட்டில் வந்து போகும் பஸ், கார், லாரிகள் உட்பட பல வாகனங்களுக்கு கீழே இறங்கி ஒதுங்கி செல்ல முடியாமல் அருவறுப்பு அடைந்துள்ளனர். குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.