ஆர்.கே.பேட்டை : காணும் பொங்கல் நாளை ஒட்டி நடந்த கிரிவல விழாவில், ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.வங்கனூரில் அமைந்து உள்ளது விசாலாட்சி சமேத வியாசேஸ்வரர் மலைக்கோவில். காணும் பொங்கல் அன்று, அதிகளவு பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்வர். இக்கிராமத்தில் பிறந்து வெளியூர்களில் வசிப்பவர்கள், இந்நாளில் சொந்த கிராமத்திற்கு வந்து தங்குவர். பழைய நண்பர்களை சந்திக்க, இந்நிகழ்ச்சி பெரிதும் உதவியாக உள்ளது. காணும் பொங்கல் விழாவை ஒட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமியை தரிசனம் செய்தனர்.