சுவிட்சர்லாந்தில் உள்ள டைம் வங்கியில், தங்களின் அவசியமான நேரம் போக மற்ற நேரத்தை சேமிக்கலாம். இதனால் மக்களுக்கு மனஅழுத்தம் குறையும். இப்படி செய்யுங்கள் எனச் சொல்கிறது அந்த வங்கி.
முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர்களுக்கு உணவு, உடை கொடுத்தல், மருத்துவ உதவி செய்தல், அவர்களின் வீட்டை சுத்தம் செய்தல் போன்ற தொண்டுகளைச் செய்யலாம். இதற்காக ஒருவர் செலவழித்த நேரத்தை அவருடைய பெயரில் அந்த வங்கி கணக்கில் கொள்ளும்.
ஒவ்வொரு நாளும் அவர் செலவிடும் நேரத்துடன் வட்டியாகவும் நேரம் வழங்கப்படும். அந்த நபர் ஏதோ சூழலில் செயல்பட முடியாத நிலையில் அவருக்கு தேவையான உதவிகளை வங்கியின் பணியாளர்கள் செய்வர். இந்த நடைமுறை சுவிட்சர்லாந்தில் சட்டமாக இருப்பது தான் ஆச்சரியம். மற்றவருக்காக நாம் இப்படி உதவி செய்தால் ஆண்டவர் உதவுவார்.