பழங்களின் மாநாடு நடந்தது. அதில் மனிதர்களுக்கு நாம் எந்த விதத்தில் உதவி செய்கிறோம் என பலாவின் தலைமையில் விவாதம் நடந்தது. பின்னர் ஆப்பிள், ஆரஞ்சு, மாம்பழம், மாதுளை, கொய்யா என வரிசையாக ஒவ்வொருவரும் தற்பெருமையுடன் தங்களைப் பற்றி பேசின. ஓரத்தில் அமர்ந்திருந்த திராட்சையை மற்ற பழங்கள் ஏளனமாக பார்த்தன. கடைசியாக திராட்சையை பேச அழைத்தது பலா.
‘‘நீங்கள் எல்லோரும் தனித்தனியாக செயல்படுகிறீர்கள். ஆனால் நாங்கள் எப்போதும் ஒற்றுமையாக(கொத்தாக) செயல்படுகிறோம். சாறு பிழியும் போதும் கொத்தாக இணைந்து பலன் கொடுக்கிறோம். ஒற்றுமையே எங்கள் உயிர். நீங்களும் இதை பின்பற்றுங்கள் என உரையை முடித்தது திராட்சை. பிறரை மதிக்க வேண்டும் என்பதை மற்ற பழங்கள் உணர்ந்தன.