திருவண்ணாமலை ரமணாஸ்ரத்தில் 76ம் ஆண்டு ஆராதனை விழா: இளையராஜா இசை அஞ்சலி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஏப் 2026 03:04
திருவண்ணாமலை : திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ரமணாஸ்ரத்தில், 76 ஆம் ஆண்டு ஆராதனை விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ரமணாஸ்ரத்தில், 76 ஆம் ஆண்டு ஆராதனை விழாவை யொட்டி, ரமண மகரிஷி சன்னதிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை மற்றும் தீபாதனை நடந்தது. ஆராதனை விழாவை யொட்டி, நடந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். சிறப்பு மலர் அலங்காரத்தில் ரமண மகரிஷி அருள்பாலித்தார். விழாவில் திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜா கலந்து கொண்டு ரமணர் பாடலை பாடி இசை அஞ்சலி செலுத்தினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்,