Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news  கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் ... வில்லியனுார் வரதராஜ பெருமாள் கோவிலில் ராமானுஜர் திருநட்சத்திர உற்சவம் வில்லியனுார் வரதராஜ பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அகத்தீஸ்வரர் கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி: கிளாரில் பக்தர்கள் பக்தி பரவசம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அகத்தீஸ்வரர் கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி: கிளாரில் பக்தர்கள் பக்தி பரவசம்

பதிவு செய்த நாள்

15 ஏப்
2026
11:04

 காஞ்சிபுரம்: கிளார் அகத்தீஸ்வரர் கோவில் இரண்டாவது நாளாக நேற்றும், மூலவர் மீது சூரியஒளி விழுந்ததால், பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.  காஞ்சிபுரம் அடுத்த கிளார் கிராமத்தில் அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, மஹா சுவாமிகள் வழிபட்ட அறம் வளர் நாயகி சமேத அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டு தினத்தில் இருந்து மூன்று நாட்கள் கருவறையில் உள்ள மூலவர் மீது சூரிய ஒளி விழும் அற்புத நிகழ்வு நடந்து வருகிறது.

அதன்பவடி, தமிழ் புத்தாண்டு தினமான நேற்று காலை சூரிய உதயமானதும், காலை 6:10 மணி முதல், 6:15 மணி வரை சூரிய ஒளி கருவறையில் உள்ள மூலவர் மீது விழுந்தது. தமிழ் புத்தாண்டு தினத்தில் மூலவர் சூரிய ஒளியில் பிரகாசத்தில் அருள்பாலித்ததால், பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சுவாமியை வழிபட்டனர். இரண்டாவது நாளான இன்று காலை 6:10 மணி முதல், 6:15 மணி வரை சூரிய ஒளி கருவறையில் உள்ள மூலவர் மீது விழுந்தது. தொடர்ந்து சிறப்பு மூலவருக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் அபிஷேக அலங்காரம் ஆராதனை நடந்தது.

இதுகுறித்து அகத்தீஸ்வரர் கோவில் நிர்வாகி ஒருவர் கூறியதாவது:கிளார் அகத்தீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டு தினத்தில் இருந்து மூன்று நாட்களும் கருவறையில் உள்ள மூலவர் மீது சூரிய ஒளி விழும் அரிய நிகழ்வு நடந்து வருகிறது. கோவிலில் மூலிகையால் செய்யப்பட்ட நந்தியம்பெருமான் முன், 27 அடி உயர மண்டபம், அதற்கு அடுத்த அர்த்த மண்டபம், அதையும் தாண்டி மூலவர் மீது சூரிய ஒளி விழுவது அரிய நிகழ்வாக நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவபெருமான் நவராத்திரி விரதத்தை கடைப்பிடித்தே, திரிபுர தகனம் செய்தார் என்று புராணங்களில் செய்தி ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 
temple news
பல்லடம்: ஆறாக்குளம் கிராமத்தில், அம்மா சோறு, ஆத்தா சோறு என்று, மழை வேண்டி பெண்கள் மழைச்சோறு எடுத்து ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: கவுண்டம்பாளையம் சிவ நகர் சிவாலயத்தில், 17ம் ஆண்டு விழா மற்றும் அமாவாசையை ஒட்டி மகா சிவ 108 ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மதுரை ஐராவதநல்லூர் ஓம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar