திருவதிகை சரநாராயண பெருமாளுக்கு நாளை சிறப்பு அலங்காரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஏப் 2026 10:04
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில், நாளை (17ம் தேதி) சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு மூலவர் பெருமாள் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதையொட்டி, காலை 6:30 மணிக்கு விஸ்வரூப தரிசனம்; 7:30 மணிக்கு நித்யபடி பூஜை, 9:00 மணிக்கு உற்சவர் பெருமாள் உள்புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து, பெருமாள் திருக்கண்ணாடி அறையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மதியம், 12:30 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 4:00 மணிக்கு நடைதிறப்பு, மாலை 6:00 மணிக்கு நித்யபடி பூஜை, இரவு 9:00 மணிக்கு ஏகாந்த சேவை நடக்கிறது.