திருத்தணி: ஷீரடி சாய்பாபா கோவில்களில் இன்று நடந்த சிறப்பு பூஜையில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். திருத்தணி அடுத்த கே.ஜி.கண்டிகை மற்றும் தலையாறிதாங்கல் ஆகிய இடங்களில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவில்களில், நேற்று காலை 8:00 மணிக்கு மூலவருக்கு பால் அபிஷேகம் நடந்தது. மதியம் 12:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மதியம் ஆரத்தி நடந்தது. மாலை 6:00 மணிக்கு உற்சவர் சாய்பாபா கோவில் வளாகத்தில் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.