சிவகங்கை: திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயிலில் ஏப்., 20 அன்று சேனை முதல்வர் புறப்பாடுடன் சித்திரை பிரமோத்ஸவ விழா துவங்குகிறது. சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 108 வைணவ தலங்களில் பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ஏப்., 20 அன்று மாலை 6:00 மணிக்கு மிருத்ஸங்கரகணம், சேனை முதல்வர் புறப்பாடுடன் சித்திரை பிரமோத்ஸவ விழா துவங்குகிறது. விழாவை முன்னிட்டு தினமும் காலை, இரவு சிம்மம், தங்க அனுமன், தங்க கருடன், தங்க சேஷ, குதிரை, அன்னம், வெள்ளி யானை வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறும். ஏழாம் நாளான ஏப்., 27 அன்று மாலை சூர்ணாபிேஷகம், தங்க தோளுக்கினியானில் புறப்பாடும் நடைபெறும். விழாவின் 10 ம் நாளான ஏப்., 30 அன்று காலை 7:50 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் சவுமிய நாராயண பெருமாள் எழுந்தருள்கிறார். அன்று மாலை 4:16 மணிக்கு பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெறும். மே 2 ம் தேதி பெருமாள் புஷ்ப பல்லக்கில் திருவீதி உலா வருகிறார். விழா ஏற்பாடுகளை தேவஸ்தான நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.