பொன்னே கவுண்டன்புதூர் மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஏப் 2026 04:04
அன்னூர்: பொன்னேகவுண்டன் புதூர், பொன் மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடந்தது.
பொன்னே கவுண்டன் புதூரில் உள்ள பழமையான பொன்மாரியம்மன் கோவிலில், நேற்று காலை 6:00 மணிக்கு, கோவில் வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்தனர். காலை 08:00 மணிக்கு, பிள்ளையார் கோவிலில் இருந்து பால்குடம் ஏந்தியபடி நூற்றுக்கணக்கானோர் பொன் மாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். கோவில் வளாகத்தில் நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. மதியம் அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகை திரவியங்களால் அபிஷேக பூஜை நடந்தது. இதையடுத்து அலங்கார பூஜை, தீபாராதனை நடைபெற்றது. அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.