ஆவிச்சிபட்டி மந்தையம்மன் கோவில் திருவிழா: பக்தர்கள் மாவிளக்கு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஏப் 2026 04:04
நத்தம்: நத்தம் அருகே ஆவிச்சிபட்டியில் மந்தையம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி அம்மன் பூந்தேரில் ஊர்வலமாக கோவிலுக்கு அழைத்து வரப்பட்டது. தொடர்ந்து கோவிலுக்குள் சென்ற அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் மாவிளக்கு, அக்னிசட்டி, கிடாய்கள் வெட்டி நேர்த்தி கடன்களை செலுத்தினர். இன்று மாலை பக்தர்கள் புடைசூழ அம்மன் பூஞ்சோலை சென்றது. விழாவில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.